சோனியாகாந்தியின் மகளும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச்செய்லாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது பாஜகவையும் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசும் போது அச்சாதீன் ( நல்ல நாள் – மோடியின் தேர்தல் பரப்புரைகளில் கூறப்பட்டது ) இன்னும் வரவில்லையா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் உ.பி. பாஜ்க பிரமுகர் ஒருவரான ஜெயகரன் குப்தா பேசியபோது ‘காங்கிரஸ் தலைவர் ஒருவர், நல்ல நாள் வந்துவிட்டதா எனக் கேட்கிறார். ஸ்கர்ட் அணிந்தவர்கள் எல்லாம் புடவை கட்டிக் கொண்டு கோயிலுக்குள் சென்றால் எப்படி நல்ல காலம் வரும். கங்கையைப் புனித நதியாக மதிக்காதவர்கள் இப்போது அங்கே சென்று பிரச்சாரம் செய்கின்றனர்’ எனக் கூறினர்.