மோடியின் பதிலுக்கு காத்திருக்கும் சசிகலா புஷ்பா: பாஜகவில் சேர திட்டமா?

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (12:20 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையாகி, பின்னர் கட்சி தலைமையால் கண்டிக்கப்பட்ட சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், பதவி விலக வற்புறுத்துவதாகவும் கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தினார்.
 
தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறிய டெல்லி நீதிமன்றத்தில் கோரியிருந்தார். பின்னர் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருப்பினும் தனக்கு பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவி வருகிறது என கூறிவருகிறார்.
 
இந்நிலையில் ஜெயலலிதா மீது டெல்லி போலீசில் புகார் அளித்த சசிகலா புஷ்பா, பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பில் அதிமுக தலைமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தனக்கான பாதுகாப்பு குறித்தெல்லாம் அவர் பிரதமரிடம் விளக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
 
மேலும் தற்போது சசிகலா புஷ்பா எந்த கட்சியில் சேர இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், தமிழக பாஜகவில் சசிகலா புஷ்பா சேர்ந்தால் அவரை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. தனக்கான தற்போதையை புகலிடமாக பாஜகவை சசிகலா புஷ்பா தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்