கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் முடி திருத்தம் செய்யும் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் மருத்துவச் சான்றிதழ் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
மகாராஷ்டிராவில் உள்ள முடி திருத்தம் செய்யும் கடைகள் மற்றும் அழகு நிலையங்களில் வாடிக்கையாளர்களிடம் மருத்துவச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு பணி செய்வதாகவும் இல்லாவிட்டால் அவர்களுக்கு முடிவெட்ட மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது
முடிவெட்டும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அருகில் நின்று பணி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்போது கொரோனா வைரஸ் இருந்தால் தங்களுக்கு தொற்றிக்கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
எனவே மகாராஷ்டிராவில் முடிவெட்ட செல்பவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவச் சான்றிதழ் கொண்டு செல்லப்படுவது அவசியம் கூறப்படுகிறது