’பரிதாபம்’ - பல நாட்களாக மருத்துவமனையில் பிரபல வீராங்கனை!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (01:14 IST)
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றுடன் வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வலது கால் மூட்டு காயத்தால் பாதிக்கப்பட்டார். 


 
 
பின், அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். காயத்தால் அவதிப்பட்ட அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தினர். 
 
இந்நிலையில், இது குறித்து சாய்னா நேவால், கூறியதாவது, ”அக்டோபர் இறுதி வரை முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை. அதனால், அதுவரையிலான போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

தற்போது நான் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளேன். இந்த இடம் மேலும் சரியலாம். குணமடைந்து விட்டால் நவம்பர் மாதங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நன்றாக உள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று வருகிறேன்.”என்றார்.
அடுத்த கட்டுரையில்