அபிநந்தன் நமக்கெல்லாம் பாடம் கற்பித்துள்ளார்: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (22:30 IST)
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய வீர்ர் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று  நிலையில் இன்று மதியமே அவர் இந்திய எல்லைக்குள் வந்துவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் கடைசி நேர இழுபறி காரணமாக சற்றுமுன் தான் இந்திய எல்லைக்குள் அபிநந்தன் வந்தார்.
 
இந்த நிலையில் அபிநந்தனுக்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரபலங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றன்ர. அந்த வகையில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அபிநந்தனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 
அபிநந்தன் தனது வீரம், சுயநலமின்மை, விடாமுயற்சி மூலம் நமக்கெல்லாம் பாடம் கற்பித்துள்ளதாகவும், தனது செயல்கள் மூலம் நம்மீது நம்பிக்கை கொள்ள நமக்கு பாடம் கற்பித்துள்ளார் என்றும் சச்சின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹீரோ என்பதற்கான உண்மையான அர்த்தமாக அபிநந்தன் விளங்கி வருவதாகவும், அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் சச்சின் மேலும் தெரிவித்துள்ளார். 
 
சச்சினின் இந்த டுவீட் பதிவாகி இன்னும் ஒருமணி நேரம் கூட ஆகவில்லை. அதற்கு 31 ஆயிரம் லைக்ஸ்களுக்கும் மேல் குவிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்