அபிநந்தன் தாயகம் திரும்பிய சில நிமிடங்களில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீரமரணம்

வெள்ளி, 1 மார்ச் 2019 (19:25 IST)
பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய வீரர் அபிநந்தன் சற்றுமுன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருடைய வருகையை இந்தியாவே கொண்டாடியது. நல்லெண்ண அடிப்படையில் அபிந்தனை விடுவிப்பதாக இம்ரான்கான் கூறியிருந்தாலும் தீவிரவாதிகளை ஒழிப்பது குறித்து இம்ரான்கான் எதுவும் குறிப்பிடவில்லை. குறிப்பாக யூசுப் அசார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் வாயை திறக்கவே இல்லை
 
இந்த நிலையில் அபிநந்தனின் வருகையை ஒருபக்கம் இந்திய மக்கள் கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா என்ற ப்குதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்
 
பயங்கரவாதிகளுடன் பலமணி நேரம் நடந்த தொடர் துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்