புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – மகரம்

சனி, 16 செப்டம்பர் 2023 (15:15 IST)
புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – மகரம்


கிரகநிலை:
ராசியில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ), ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்; சூர்யன்- தொழில் ஸ்தானத்தில் கேது, சந்திரன்  என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
27-09-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-09-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தனது எண்ணங்களை வெளிபடுத்த தயங்கும் மகர ராசி அன்பர்களே இந்த மாதம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தடங்கல்கள் அகலும் . புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. அரசியல்துறையினர் வீண்பிரச்சனைகளில் தலையிடாமல்  ஒதுங்கிவிடுவது நன்மைதரும். கலைத்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்.

மாணவர்கள் முதல்தர  மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர்  வாங்கித்தருவர்.

உத்திராடம் - 2, 3, 4:
இந்த மாதம் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.

திருவோணம்:
இந்த மாதம் புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.  வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

அவிட்டம் - 1, 2:
இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.  பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். 

பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.
சந்திராஷ்டம தினங்கள்: அக் 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 3, 4, 5

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்