புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – விருச்சிகம்

சனி, 16 செப்டம்பர் 2023 (15:11 IST)
புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – விருச்சிகம்


கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய்; சூர்யன்- அயன சயன போக ஸ்தானத்தில் கேது, சந்திரன்  என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
27-09-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-09-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் ரண ருண ரோக  ஸ்தானத்தில் இருந்து பஞ்சம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
மற்றவர்களின் மணம் கோணமல் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

தொழிலதிபர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெறுவார்கள். நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள்.  உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.  குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும்.

உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள். பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வரும். குழப்பமான மனநிலை அகலும். கலைத்துறையினர் முன்யோசனையுடன்  திட்டமிடல் அவசியம். அரசியல்துறையினருக்கு புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.   திறமையுடன்  காரியங்களை செய்வீர்கள்.

விசாகம் - 4:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான  அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

அனுஷம்:
இந்த மாதம் எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. 

கேட்டை:
இந்த மாதம் எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.

பரிகாரம்: முடிந்த வரை அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: அக் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 29, 30

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்