புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – தனுசு

சனி, 16 செப்டம்பர் 2023 (15:13 IST)
புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – தனுசு


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ), ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்; சூர்யன்- லாப ஸ்தானத்தில் கேது, சந்திரன்  என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
27-09-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-09-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தனது எண்ணங்களை துணிந்து செயல்படுத்த நினைக்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடங்கல் நீங்கும். தேவையற்ற மனக்கவலை அகலும். வழக்கு விவகாரங்களில் வேகமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு நீங்கும். கிடப்பில் இருந்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்கள் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து கொட்டும். அரசியல்துறையினருக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள்  செயல்பாடுகள் இருக்கும்.

மூலம்:
இந்த மாதம் அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.  தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும்.

பூராடம்:
இந்த மாதம் தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது.

உத்திராடம் - 1:
இந்த மாதம் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரவு அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாகணபதியை நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: அக் 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 1, 2

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்