கடனை திருப்பி தராத வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி சென்று சாக்லேட் வழங்கும் திட்டம்: எஸ்பிஐ

வியாழன், 21 செப்டம்பர் 2023 (12:05 IST)
வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராத வாடிக்கையாளர்களை வீடு தேடி சென்று சாக்லேட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 
 
எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராதவர்களுக்கு நினைவூட்டும் வகையில் மெசேஜ் அனுப்பப்படும் என்றும் அந்த மெசேஜ்களுக்கு பதில் அளிக்காதவர்களை கால் செய்து நினைவூட்டப்படும் 
 
கால் செய்தும் பதில் அளிக்காதவர்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று சாக்லேட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி அதிகாரி தெரிவித்தார். 
 
வீடு தேடி சென்று சாக்லேட் வழங்கி அவருக்கு கடனை திரும்ப செலுத்த நினைவூட்டுதல் செய்யும் இந்த திட்டம்  சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும் இந்த திட்டத்தை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த திட்டமிட்டமிட்டு இருப்பதாகவும் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்