சிவகாசியில் 1 ரூபாய்க்கு டீசர்ட்.. கடை திறக்கும் முன்னரே குவிந்த வாடிக்கையாளர்கள்..!

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (15:54 IST)
சிவகாசியில் உள்ள ஜவுளி கடையில் இன்று ஒரு ரூபாய்க்கு டீசர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து கடை திறக்கும் முன்னரே கடை வாசலில் ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்த நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சிவகாசியில் உள்ள துணிக்கடை ஒன்றில் இன்று குறிப்பிட்ட நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டி-ஷர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அசத்தல் அறிவிப்பு காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே வாசலில் வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து  இடையூறு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் கடை திறந்ததும் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய் கொடுத்து டீ சர்ட்டை மகிழ்ச்சியாக வாங்கி செல்லாமல் இந்த அறிவிப்பாளர் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்