சிவசேனா கட்சி பெயர், சின்னத்தைப் பெற ரூ.2,000 கோடிக்கு பேரமா?

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (15:45 IST)
சமீபத்தில் சிவ சேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதை அடுத்து இதற்காக 2000 கோடி பேரம் நடந்துள்ளதாக உத்தவ் தேவ்  தாக்கரே தரப்பு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிவசேனா கட்சி பெயர் சின்னம் ஆகியவற்றிற்காக ரூபாய் 2000 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சஞ்சய் ராவத் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ரூ. 2000 கோடி மதிப்பிற்கு சிவசேனா கட்சியின் பெயர் சின்னம் பெறுவதற்கு ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாக எனக்கு தெரியும்.
 
இது முதல் கட்ட புள்ளி விவரம் மட்டுமே. இதே சமயம் இது 100% உண்மை தொடர்ந்து இது குறித்த நிறைய விஷயங்களை வெளியிடுவேன், நாட்டில் நாட்டின் வரலாற்றில் இப்படி ஒரு பேரம் நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்