போலி விளம்பரம்: பதஞ்சலிக்கு ரூ.11 லட்சம் அபராதம்!!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (10:16 IST)
பாபா ராம்தேவ், பதஞ்சலி என்ற பெயரில் பல்வேறு மூலிகை, ஆயுர்வேத பொருட்களை தயாரித்து, இந்திய அளவில் விற்பனை செய்துவருகிறார். 


 
 
இந்நிறுவனம், போலி விளம்பரம் செய்ததாக வந்த புகாரின் பேரில், பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஹரித்துவார் நீதிமன்றம். 
 
இந்நிறுவனம், இந்திய சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தனது தொழிற்சாலையில் தயாரிக்காமல் வேறு நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்த சில பொருட்களை பதஞ்சலி விற்பதாகக் கூறப்படுகிறது. 
 
எனினும், இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல், குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் தனது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவதாகக் கூறி, பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்துவருகிறது.
 
இதனால் போலி விளம்பரம் செய்வதைக் கண்டித்து, பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்