தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மேலூரை சேர்ந்த தம்பதிகள் உரிமை கொண்டாடுகின்றனர். கதிரேசன், மீனாள் தம்பதியினருக்கு 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ளார் தனுஷ். இவருடைய உண்மையான பெயர் கலையரசன் என அவர்கள் கூறுகின்றனர்.
தங்கள் மகன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது கடந்த 2002-ஆம் ஆண்டு படிக்க பிடிக்கவில்லை என பிரிந்து சென்றுவிட்டான். தனுஷ் என பெயரை மாற்றி நடிகராக மாறிவிட்டதாகவும், இதுவரை தங்களை வந்து பார்க்கவில்லை எனவும். சென்னைக்கு சென்ற அவரை பார்க்க முயன்றால் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருகின்றனர் எனவும் கூறுகின்றனர் கதிரேசன், மீனாள் தம்பதியினர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தை தற்போது நாடியுள்ள கதிரேசன், மீனாள் தம்பதியினர் தனுஷ் தங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் ஜனவரி 12-ஆம் தேதி நேரில் ஆகுமாறு தனுஷுக்கு சம்மன் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.
ஆனால் நடிகர் தனுஷும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவும் இதனை மறுத்துள்ளனர். நடிகர் விஷுவும் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ் என புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய உள்ளார் நடிகை குஷ்பு.
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகை குஷ்பு நிஜங்கள் என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் நாளை தனுஷ் தங்கள் மகன் என உரிமை கொண்டாடும் கதிரேசன் மீனாள் தம்பதியினர் கலந்துகொள்ள உள்ளனர். ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மேலும் இந்த தனுஷ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.