ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

Mahendran
செவ்வாய், 28 மே 2024 (14:27 IST)
விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து உள்ளதாகவும் இதே போல் யெஸ் வங்கிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளையும் இந்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது என்பதும் விதிகளை மீறும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ வங்கிக்கு ஒரு கோடியும் யெஸ் வங்கிக்கு 91 லட்சமும் அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவர பராமரிக்காமல் இருந்தது, வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்புதொகை பராமரிக்காமல் இருந்ததற்கு அபராதம் விதித்தது ஆகிய விதிகளை மீறியதாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்