ரெப்போ வங்கி வட்டி விகிதம் எந்தவித மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும் என்றும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் உலகப் பொருளாதாரம், தொடர்ந்து கலவையான தோற்றத்தையே வழங்கி வருகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து ஏற்கனவே செயல்பட்டு வரும் 6.5 சதவீதமாகவே ரெப்போ வட்டி விகிதம் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததால் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரிக்கும். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இம்மாதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.