இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதாகவும் அவருக்கு காங்கிரஸ் அந்த பதவியை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மூன்று இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியும்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனக்கு கிடைக்கும் ஒரு இடத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் அவர்களை நிறுத்த போவதாக கூறப்படுகிறது. மேலும் ரகுராம் ராஜனுக்கு உத்தம் தாக்கரே ஆதரவு கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.