யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்… ரிசர்வ் வங்கி அதிரடி!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:18 IST)
வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாததால் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

சிவப்புக் கொடி கணக்குகளை முறையாக வகைப்படுத்தாதது, வருடாந்திர அறிக்கையில் பாதுகாப்பு ரசீதுகளுக்கான வழங்கல்களை வெளியிடாதது என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது குற்றச்சாட்டுகளை வைத்தது ரிசர்வ் வங்கி. இது சம்மந்தமாக ஏன் அபராதம் விதிக்க கூடாது என நோட்டீஸூம் அனுப்பியது.

இந்த நோட்டீஸூக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா விளக்கமளித்தும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்