கர்நாடகாவில் கனமழை பாதிப்புக்கு நிவாரணம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (19:59 IST)
கர்நாடகாவில் கனமழை பாதிப்பு காரணமாக அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் பாதிப்பட்டுள்ளவர்களுக்கு அம்மாநில முதல்வர் பவசராஜ்  பொம்மை நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

அதில், முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளுக்கு ரூ.1 லட்சம், மழைநீர் பகுந்து பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்