இதனை அடுத்து 152 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்ததை அடுத்து தமிழக அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அணியின் நாராயணன் ஜெகதீசன் அதிகபட்சமாக 41 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இறுதிப் போட்டியில் 15 பந்துகளில் 33 ரன்களை விளாசிய ஷாருக்கான் அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.