கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு! – 50 ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகள் அறிவிப்பு!

Webdunia
புதன், 5 மே 2021 (12:44 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் நிதி சவால்களை எதிர்கொள்ள ஆர்பிஐ சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் மீண்டும் மாநில வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதனால் மீண்டும் பொருளாதாரரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் நிதி சவால்களை சமாளிக்க சலுகைகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகந்த தாஸ் அறிவித்துள்ளார்.

அதில் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும். சிறிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் கடன் அளிக்கும் என்று கூறிய சக்திகாந்த தாஸ், முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்