இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முதலாக கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இதனால் பகுதி நேர, வார இறுதி மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்டவற்றால் பல்வேறு அமைப்பு சாரா தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.