நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி வேட்பு மனு!

Sinoj

புதன், 14 பிப்ரவரி 2024 (08:33 IST)
நாடு முழுவதும் 15 மாநிலங்களில்,56 மாநிலங்களவை  உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில்,  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
 
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தொடர்ந்து கூட்டணிக்காக பேச்சுவார்த்திய நடத்தி வருவதுடன், தொகுதிப் பங்கீடு பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
 
நாடு முழுவதும் 15 மாநிலங்களில்,56 மாநிலங்களவை  உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. 
 
உத்தரபிரதேசம் மா நிலத்தில் இருந்து,  சமாஜ்வாடி கட்சி சார்பில் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோக் ரஞ்சன் மற்றும் ராம்ஜிலால் சுமன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்