10, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விட்டதா? சிபிஎஸ்இ விளக்கம்

Siva

செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (18:44 IST)
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில் எந்த வினாத்தாளும் கசியவில்லை என்றும் இந்த வதந்திகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர் நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.  
 
சிபிஎஸ்இ  10, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக பரவும் தகவல் தவறானது என்று தெரிவித்துள்ள சிபிஎஸ்சி  எந்த வினாத்தாளும் கசியவில்லை என்றும் கசிந்த வினா தாள்கள் தான் வரும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது  
 
மேலும் பொது தேர்வுகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது  மேலும் ஏற்கனவே அறிவித்தபடி வரும் 15ஆம் தேதியிலிருந்து 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தொடங்கும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது  
 
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் இவ்வாறு சிலர் வதந்தி பரப்புகின்றனர் என்றும் சிபிஎஸ்இ தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்