ட்விட்டர் சி.இ.ஓ கூறுவது பொய், இந்திய சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை: மத்திய அமைச்சர் பதிலடி..!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (12:13 IST)
ட்விட்டர் முன்னாள் சிஇஓ கூறியது முழுக்க முழுக்க பொய் என்றும் இந்திய சட்டத்தை ட்விட்டர் மதிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் ராஜூ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
 
தான் ட்விட்டர் சி.இ.ஓவாக இருந்தபோது இந்திய அரசு பல நெருக்கடிகளை தங்களுக்கு அளித்ததாகவும் குறிப்பாக விவசாயிகள் போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிரான பதிவுகளை பதிவு செய்யும் ட்விட்டர் கணக்குகளை முடக்க தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டன என்றும் முன்னாள் ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சி தெரிவித்தார் 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ’இது ஒரு அப்பட்டமான பொய் என்றும் டோர்சி மற்றும் அவரது குழுவினரின் கீழ் ட்விட்டர் வலைதளம் இயங்கி வந்தபோது இந்திய சட்டத்தை அவர்கள் மீறி வந்தனர் என்றும் தெரிவித்தார். 
 
2020 முதல் 2022 வரை இந்திய சட்டத்திற்கு அவர்கள் இணங்கவே இல்லை என்றும் நமது அரசியல் அமைப்பு கூறப்பட்டுள்ள விதிகளை தொடர்ந்து மீறி வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
2022 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இந்திய சட்டத்திற்கு இணங்கி செயல்பட தொடங்கினர் என்றும் இந்த விவகாரத்தில் ட்விட்டர் ஊழியர்கள் யாரும் சிறைக்கு செல்லவில்லை என்றும் அலுவலகம் முடக்கவில்லை என்றும் ஜோசியின் பேச்சு முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்