ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என மோடி மிரட்டினார்: முன்னாள் சி.இ.ஓ குற்றச்சாட்டு..!

செவ்வாய், 13 ஜூன் 2023 (07:33 IST)
ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என பிரதமர் மோடி மிரட்டினார் என ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ குற்றம் சாட்டியுள்ளார். 
 
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவான ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மோடி அரசு அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சே பகிர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
 
அரசை விமர்சித்த ட்விட்டர் கணக்குகளை முடக்கவில்லை என்றால் இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் ட்விட்டர்  ஊழியர்களின்  வீடுகளில் சோதனை நடத்துவோம் என்றும் எங்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் கழித்து ட்விட்டர்  நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்