ராஜஸ்தானில் 72% வாக்குப்பதிவு.. ஆட்சி அமைப்பது யார்?

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (07:40 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த போது 72 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி ஆறு மணி மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்கட்சியான பாஜகவுக்கும் தான் கடும் போட்டி என்று கூறப்பட்டது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கும் நிலையில்  வேட்பாளர் ஒருவர் இறந்துவிட்டதை அடுத்து 199 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  அனைத்து தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததால் 72 சதவீதம் பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக ஆட்சிப் பொறுப்பேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்