ரயில்களில் ஓசிப்பயணம்: 9 மாதங்களில் ரூ.1017 கோடி அபராதம் வசூல்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (13:58 IST)
ரயில்களில் ஓசிப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் ஆயிரத்து 17 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாடு முழுவதும் கடந்த ஒன்பது மாதங்களில் 1.7 கோடி பயணிகள் டிக்கெட் எடுக்காமல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
 
மேலும் பயணிகளிடமிருந்து வசூலித்த தொகை கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆயிரத்து 17 கோடி என தெரிவித்துள்ளது. இந்த தகவல் ரயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இனிமேலாவது ரயில் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் படி ரயில்வே துறை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்