மோடி அரசை காணவில்லை: ராகுல்காந்தி டுவீட்டால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (07:43 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க மாநில அரசுகளின் சுகாதார அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை
 
மேலும் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 20,25,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சற்றுமுன் செய்தி வெளிவந்துள்ளது.
 
கடந்த மார்ச் மாதம் முதல் ஏழு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் லட்சக்கணக்கில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதாரத் துறையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்து விட்டது என்றும் மோடி அரசை காணவில்லை என்றும் டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்