கருணாஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி ? அவர் மகன் வெளியிட்ட அறிவிப்பு!

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (07:33 IST)
தன் தந்தை ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் தொகுதிக்கு சென்றதால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் திருவாடனை தொகுதி எம் எல் ஏ வுமான கருணாஸுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என் அவரது மகன் கென் கருணாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் ‘என் தந்தை ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் அவரது தொகுதிக்கு சென்று தொகுதிக்கு சென்ற வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் அவர் உடல்நிலை சீராக உள்ளது. உங்கள் அனைவரின் நல விசாரிப்புகளுக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்