இந்த நிலையில் தற்போது எஸ்பி பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரை மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது