2 ஆண்டுகள் சிறை தண்டனை: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (11:29 IST)
மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவதூறு  வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்தார்.
 
இந்த மேல்முறையீட்டு மனு இன்று அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி குஜராத் ஐகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்