கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தற்போது ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தொண்டர்களிடம் பேசிய போது கர்நாடகத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என நான் உணர்கிறேன்.
ஆனால் அதே சமயம் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஏனெனில் பாஜகவிடம் நிறைய பணம் இருக்கிறது, ஒரு வேளை குறைவான சீட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ஊழல் கட்சியான பாஜக மக்களின் வெற்றியை திருடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.