மோடி சமூகமா? அப்படினு ஒன்னு இல்லவே இல்ல: ராகுல் காந்தியின் வழக்கறிஞர்

திங்கள், 27 மார்ச் 2023 (10:23 IST)
மோடி சமூகம் என்பதே ஒன்று இல்லை என ராகுல் காந்தி வழக்கறிஞர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி, மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் மோடி சமூகத்தையே அவர் அவதூறு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது எம்பி பதவியின் தகுதி நீக்கம் செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தியின் வழக்கறிஞர் ’மோடி சமூகம் என்பது ஒன்றே இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை நரேந்திர மோடி என்றால் தனி நபருக்கு எதிரான வழக்கு தான் என்றும் ஒரு சமூகத்துக்கு எதிரான வழக்கு இல்லை என்றும் அப்படி ஒரு சமூகமே இல்லை என்று போது அவரை எப்படி ஒரு சமூகத்திற்கு எதிரான வழக்கு என்று புகார் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். 
 
மோடி என்ற பெயரை கொண்டவர்கள் 13 கோடி பேர் இருக்கிறார்கள் என்றும் அடையாளம் காண முடியாத சமூகமாக இருக்கும் இவர்களால் புகார் அளிக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்