கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விலைக்கு வாங்கிய இன்னொரு அணி!

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (21:16 IST)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விலைக்கு வாங்கிய அணி!
ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்றுள்ள அணைகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் இன்னொரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே மேற்கிந்திய தீவுகளில் சிபிஎல் எனக்கூறப்படும் கரீபியன் பிரீமியர் லீக் என்ற தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் உள்ளன. இந்த தொடரின் எட்டாவது சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிபிஎல் தொடரில் விளையாடி வரும் செயின்ட் லூசியா ஜோக்ஸ் என்றாலே என்ற அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விலைக்கு வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான மோகித் சர்மா என்பவர் கூறியதாவது: உலகின் சிறந்த தொடர்களில் முதலீடு செய்ய ஆவலாக இருக்கின்றோம். சி.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 7 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் வாங்கியுள்ள அணியின் உடை மற்றும் பெயர் குறித்த அறிவிப்பு பிசிசிஐயின் அனுமதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்