மோடியின் படத்தை நீக்கிய பஞ்சாப் மாநில அரசு

Webdunia
வியாழன், 27 மே 2021 (17:03 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில அரசு பணம் கொடுத்து தடுப்பூசி வாங்கி வருவதால் சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க  அம்மாநில அரசு உத்தரவிட்டு அம்மாநில முதல்வர்  புபேஷ் பாஹலில் படத்தை வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா தடுப்பூசி  செலுத்திக் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரதமரின் மோடியின் படத்தை நீக்கியுள்ளது அம்மாநில அரசு.

இதனால் மத்திய அரசிற்கும் அம்மாநில அரசிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதோ என கேள்வி உருவாகியுள்ளது.  மேலும் மோடியின் படத்தை நீக்கியதால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்