மோடி வாழ்க என கோஷமிட்ட பஞ்சாப் துணை முதல்வர்… பாஜகவினர் முற்றுகை!

வெள்ளி, 7 ஜனவரி 2022 (10:12 IST)
பஞ்சாப்பில் மோடி கலந்துகொள்ள இருந்த நிகழ்வுக்கு சென்ற போது பொதுமக்கள் சூழ்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பஞ்சாப் சென்றார். வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்து காரில் பெரோஸ்பூர் நோக்கி சென்றார்.

அப்போது நெடுஞ்சாலை ஒன்றில் பிரதமரின் கார் சென்று கொண்டிருந்தபோது போராட்டக்காரர்கள் சாலையை வழிமறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமர் மோடியின் கார் மேம்பாலத்தில் நின்றது. பின்னர் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து நேற்று பஞ்சாப் துணை முதல்வர் ஓ பி சோனி பெரோஸ்பூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது பாஜகவினர் அவரின் காரை மறித்து ’ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். மேலும் ஓ பி சைனியின் காரை நகரவிடாமல் 40 நிமிடத்துக்கு மேல் கோஷமிட்டனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஷைனி ‘மோடி வாழ்க’ என்று கோஷமிட்டார். அதன் பின்னரே அங்கிருந்து போராட்டக்காரர்கள் அவரது காரை செல்ல அனுமதித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்