புனே கார் விபத்து.. சிறுவனின் தாத்தா அதிரடி கைது.. என்ன காரணம்?

Mahendran

சனி, 25 மே 2024 (13:31 IST)
புனேவில் கடந்த சில நாட்களுக்கு முன் 17 வயது சிறுவன் கார் விபத்தை ஏற்படுத்தி இரண்டு நபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுவன் சிறு திருத்த பள்ளியில் உள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் வேதாந்த் என்பவரின் தாத்தா சுரேந்திரா அகர்வால் என்பவர் தனது கார் ஓட்டுநர் கங்காராம் என்பவரை மிரட்டி கார் விபத்தை தான் ஏற்படுத்திதாக பழியை ஏற்க வற்புறுத்தியதாக தெரிகிறது. 
 
ஆனால் டிரைவர் அந்த பழியை ஏற்றுக்கொள்ளாமல் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து அவரது புகாரின் பேரில் சுரேந்திர அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கார் விபத்தின் வழக்கில் சாட்சிகளை கலைக்க முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில் காவல்துறை தரப்பில் இந்த வழக்கை மெதுவாக விசாரிக்க சம்பந்தப்பட்ட காவலர்களை அவர் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
 ஏற்கனவே சிறுவனின் தந்தை விஷால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்