கர்நாடகாவின் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த ஷோயப் அகமது மிர்சா என்ற சோட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 நாட்களாக, 4 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்பினரின் சோதனையில் மிர்சா கைது என்று கூறப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட மிர்சா 2018 ல் சிறையிலிருந்து விடுதலையான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த நபர் என்றும், இவர்தான் பெங்களூரு குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட நபர்களுக்கு உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பெங்களூரில் சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்திற்கு மர்ம நபர்கள் குண்டு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முசபீர் உசேன் மற்றும் அப்துல் ஹுசைன் என்ற நிலையில் தற்போது மூன்றாவதாக மிர்சா கைது செய்யப்பட்டுள்ளார்.