ஒரு கோடிக்கு செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்: சேலத்தில் சபீர் என்பவர் கைது..!

Siva

வெள்ளி, 24 மே 2024 (11:19 IST)
சேலத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். 
 
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்த சபீர் என்பவரை சேலம் அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்த  நிலையில் கைது செய்யப்பட்ட சபீரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி மத்திய அரசு திடீரென 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டு மற்றும் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது என்பதும், அதில் 2000 ரூபாய் நோட்டும் சமீபத்தில் திரும்ப பெறப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 ரூ.1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பணத்தை சபீர் என்பவர் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வைத்திருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்