இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (22:20 IST)
தமிழகத்தில் கடந்த வெள்ளி அன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் சுமார் 50% உயர்ந்ததால் பெரும் பாதிப்பில் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு இயங்கும் பேருந்துகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலிருந்து தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

எனவே இந்த கட்டண உயர்வுக்கு பின்னர் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஈசிஆர் வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் ரூ.145 ஆக உயர்த்த‌ப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ரூ.100 கட்டணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 120 ரூபாயாகவும், பெங்களூ‌ருவுக்கு 290 ரூபாயாகவும், திருப்பதிக்கு 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் புதுச்சேரிக்குள் பயணம் செய்பவர்களுக்கு இன்னும் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்