பிரியாணி மசாலா விக்குறது ஒரு குத்தமா?: சிவசேனாவின் அட்ராசிட்டி போராட்டம்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (09:07 IST)
மகாராஷ்டிராவில் கடை ஒன்றில் பாகிஸ்தான் பிரியாணி மசாலா விற்கப்பட்டதை கண்டித்து சிவசேனா கட்சியினர் கடை முன்பு நின்று போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பிரபல நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள். இக்கடையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலாவை விற்கிறார்கள் என தகவல் வெளியானது.
 
இதனால் கோபமடைந்த சிவசேனா கட்சியை சார்ந்த நபர்கள் சிலர், அந்த கடையின் முன்பு அமர்ந்து, முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போராட்டக்காரர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்