பிரதமர் நரேந்திரமோடி நாளை ஜம்மு பயணம்!

Sinoj
திங்கள், 19 பிப்ரவரி 2024 (13:04 IST)
பிரதமர்  நரேந்திரமோடி நாளை  ஜம்முவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, ரூ.30,500  கோடி மதிப்பிலான  வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
 
ஜம்முவில் உள்ள மெளலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது, 30,500 ரூபாய் மதிப்பிலான  பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
 
இதில், ஜம்முவின் விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள  எய்ம்ஸ் மருத்துவமனை,  செனாப் ரெயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
 
ஏற்கனவே  நிறைவுபெற்ற சாலை மற்றும் ரெயில் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
 
இந்த நிகழ்ச்சியின்போது, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிர தேசத்தில் புதியாக பணியில் சேர்ந்த 1500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்