கவாஸ்கரின் 50 ஆண்டுகளுக்கு முந்தைய சாதனையை சமன் செய்த சர்பராஸ் கான்!

vinoth

திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:01 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரர் சர்பராஸ் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் அரைசதம் அடித்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய  வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சர்பராஸ் கான்.

இதற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு அறிமுகமான தனது முதல் டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை சமன் செய்துள்ளார் சர்பராஸ் கான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்