சுப்பிரமணியன் சாமிக்கு குட்டு வைத்த பிரதமர் மோடி

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (09:50 IST)
சுப்பிரமணியன் சாமி என்றாலே சர்ச்சைகளும் சேர்ந்து வரும். எப்பொழுதுமே சர்ச்சையாகவே பேசி மீடியாக்களில் வலம் வருபவர். சமீபத்தில் மாநிலங்களைவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட இவர் தொடர்ந்து குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருகிறார்.


 
 
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதியமைச்சர் அருண் ஜெட்லி என வரிசையாக குறிவைத்து கருத்து தாக்குதல் தொடுத்தார் சுப்பிரமணியன் சாமி.
 
அவர்களின் தேசப்பற்று குறித்தும் கேள்வி எழுப்பினார். அவர்களை ஏதோ தேச விரோதிகளை போல் சித்தரித்தும், தான் தான் தேசத்தை காப்பாற்ற வந்த உத்தம புருஷன் போலும் சர்ச்சைக்குறிய வகையில் சுப்பிரமணியன் பேசி வந்தது பாஜக மேலிடத்தையே சங்கடத்தை ஏற்படுத்தியது.
 
இந்நாள் வரை இது குறித்து வாய் திறக்காமல் மவுனமாக இருந்து வந்த பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமியை மறைமுகமாக விளாசி தள்ளியுள்ளார்.
 
கட்சியை விட யாரும் பெரியவர்கள் கிடையாது. சுய விளம்பரத்திற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒருவர் வெளியிட்டால் அது தவறு என்றும் நான் அதில் தெளிவாக இருக்கிறேன் என்றும் கூறினார் மோடி.
 
மேலும், என்னுடைய கட்சியை சேர்ந்தவரா இல்லையா என்பதை விட இது பொருத்தமற்ற செயல். சுயவிளம்பரத்தின் மீதான ஆசை நாட்டுக்கு நல்லது இல்லை. யாராவது தங்களை அனைத்தையும் விட உயர்வாக எண்ணிக்கொண்டால் அது தவறு என்று சுப்பிரமணியன் சாமியை பிரதமர் மோடி மறைமுகமாக  கண்டித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்