இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் நேற்று அயோத்தியில் ஒரே சமயத்தில் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நரகாசூரனை வதம் செய்த நாள் தீபாவளி என்ற பொதுவான கருத்து உள்ள நிலையில், வட மாநிலங்களில் ராமர் சீதையை மீட்டு அயோத்திக்கு அழைத்து வந்த நாளே தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.
இந்நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக அயோத்தியில் சரயு நதிக்கரையில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அவ்வாறாக கடந்த ஆண்டுகளில் ஒரே சமயத்தில் 15 லட்சம் தீபங்களை ஏற்றி உத்தர பிரதேசம் கின்னஸ் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தங்கள் சாதனையை தாங்களே முறியடிக்கும் விதமாக இந்த ஆண்டு 26 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய சாதனை படைத்துள்ளனர். மொத்தமாக 26,17,215 அகல்விளக்குகள் ஏற்றப்பட்டது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மக்களும் கண்டு களித்தனர்.
Edit by Prasanth.K