மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

Siva

திங்கள், 20 அக்டோபர் 2025 (08:35 IST)
கேரளாவின் கொச்சியில் உள்ள செயின்ட் ரீட்டாஸ் பள்ளியில் ஹிஜாப் அணிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, அதே பள்ளியை சேர்ந்த மேலும் இரண்டு மாணவிகள் விலகியுள்ளனர். பள்ளி நிர்வாகம் பிற மதங்கள் மீது பாரபட்சமாக நடந்துகொள்வதாக மாணவிகளின் தாயார்கள் சாட்டியுள்ளனர்.
 
பள்ளி நிர்வாகத்தின் நிலைப்பாடு, தங்கள் குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தியதாக ஒரு மாணவியின் தாயார், "ஹிஜாப் அணியும் சிறிய பெண் பயத்தை ஏற்படுத்துவார் என்ற கூற்று எனது கலாச்சாரத்தை அவமதிப்பதாகும்" என்று தெரிவித்தார். மேலும், இத்தகைய மனநிலை கொண்ட நிர்வாகத்தின் கீழ் தங்கள் குழந்தைகள் வளர்வது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று கருதி, அவர் தனது மகள்களை அனைத்து நம்பிக்கைகளுக்கும் இடமளிக்கும் 'அவர் லேடிஸ் கான்வென்ட்' பள்ளியில் சேர்த்துள்ளார்.
 
முன்னதாக, ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் ஏற்பட்டதால், பள்ளி நிர்வாகம் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்தது. இதற்கிடையில், ஹிஜாப் அணிந்ததற்காக மாணவியை வெளியேற்றியது கடுமையான தவறான நடத்தை மற்றும் கல்வி உரிமை சட்டத்தை மீறிய செயல் என்று கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி கண்டனம் தெரிவித்தார். ப
 
ள்ளி நிர்வாகம் படிப்பு தொடர அனுமதித்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்