மந்திரம் ஓதியவாறு தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்: காட்டி கொடுத்த வீடியோ!

Webdunia
வியாழன், 20 மே 2021 (08:37 IST)
மந்திரம் ஓதியவாறு தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்: காட்டி கொடுத்த வீடியோ!
திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் ஒருவர் தாலியை கையில் வைத்துக்கொண்டு மந்திரம் ஓதியவாறு தாலியில் உள்ள தங்க குண்டுமணிகள் திருடிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்திய புரோகிதர் தாலியை கையில் வைத்துக்கொண்டு மந்திரம் ஓதினார். அப்போது அவர் நைசாக தாலியில் இருந்த தங்க குண்டுமணிகளை திருடியதாக தெரிகிறது 
 
இது குறித்து திருமணத்தில் கலந்து கொண்ட யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திருமண வீடியோவை திருமண வீட்டார் போட்டு பார்க்கும்போது புரோகிதர் தாலியில் உள்ள தங்கத்தை திருடியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல் நிலையத்தில் திருமண வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் புரோகிதரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரு புரோகிதரே தாலியில் உள்ள தங்கத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்