வீட்டிலேயே கொரோனா டெஸ்ட் செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் ஒப்புதல்

Webdunia
வியாழன், 20 மே 2021 (08:32 IST)
வீட்டிலேயே கொரோனா டெஸ்ட் செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் ஒப்புதல்
வீட்டிலேயே கொரோனா டெஸ்ட் செய்யும் கருவி ஒன்றுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது 
 
தற்போது கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றால் அரசின் பரிசோதனை கூடங்கள் அல்லது தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க புதிய கருவியான ஆண்டிஜென் டெஸ்டிங் என்ற கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் வீட்டிலிருந்து கொண்டே கொரோனா பாசிட்டிவ் அல்லது கொரோனா நெகட்டிவ் என்பதை கண்டுபிடித்து கொள்ளலாம் இந்த கருவிக்கு பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது 
 
இவை விரைவில் மக்கள் மத்தியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் மட்டும் இந்த கருவியை பயன்படுத்தி கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்