சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:37 IST)
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்த மாற்றத்தை அறிவித்து வரும் நிலையில், இன்று வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் 48 ரூபாய் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மாதம் ரூ. 1855க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் 48 ரூபாய் உயர்வுடன் ரூ. 1933க்கு விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டரை பயன்படுத்தும்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக விலைவாசி உயரும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அதே நேரத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூ. 818.50க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்